
தொடருந்தில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை தொடருந்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள், நேற்று(25.08.2024) வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
756 இல இன்ஜினை கொண்ட தொடருந்தில் 20 கொள்கலன்களில் இந்த குப்பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நூர் நகர் தொடருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் மற்றும் நேற்று பிற்பகல் இந்த குப்பைகளை தொடருந்தில் கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.