தாங்க முடியாத பொடுகு தொல்லைக்கு ஒரே தீர்வு இது தான்..!
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது முடியையும் சருமத்தையும் அழகாகவும் ஆரோக்கியத்துடனும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு முடி வளர்ச்சி குன்றி அதில் பொடுகு தொல்லையும் அதிகரித்து விடும். பொடுகு தொல்லையானது அழுக்கு முடி அல்லது சுகாதாரமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது. மேலும் இது உரிதல், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தி சங்கடமான நிலைக்கு தள்ளிவிடும். பொடுகுக்கு சிகிச்சையளிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது வீட்டு வைத்தியத்தை தான். அந்தவகையில் ஆப்பிள் வினிகர் வைத்து எப்படி நீங்கள் பொடுகை அடியோடு விரட்டலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஆப்பிள் வினிகர் + கற்றாழை
தேவையான பொருட்கள்
- 1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்
- 1/4 கப் புதிய அலோ வேரா ஜெல்
- தேவைக்கேற்ப தண்ணீர்
செய்முறை
- முதலில் ஆப்பிள் சைடர் வினிகருடன் கற்றாழையை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- அடுத்து அதில் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.
- பின் உங்கள் முடியை ஷாம்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
- இறுதியாக 10 நிமிடம் கழித்து தலைமுடியை நன்றாக கழுவவும்.
ஆப்பிள் வினிகர் + தேன்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்
- 2 டீஸ்பூன் தேன்
- தேவைக்கேற்ப தண்ணீர்
செய்முறை
- முதலில் வினிகருடன் தேன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
- அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
- பிறகு தலைமுடியை ஷாம்பு போட்டு கழுவிய பின் தலைமுடியில் தடவவும்.
- பின் 10 நிமிடங்களுக்கு பிறகு தலைமுடியை நன்ஙாக கழுவவும்.
வினிகர் + தேயிலை மர எண்ணெய்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்
- 7-8 சொட்டு தேயிலை மர எண்ணெய்
- தேவைக்கேற்ப தண்ணீர்
செய்முறை
- முதலில் தேயிலை மர எண்ணெயில் வினிகரை சேர்த்து கலக்கவும்.
- அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- பிறகு தலைமுடியை ஷாம்பு போட்டு கழுவிய பின் தலைமுடியில் தடவி மசாஜ் செய்யவும்.
- இறுதியாக 5-10 நிமிடங்களுக்குப் பிறகு முடியை நன்கு கழுவினால் பொடுகு தொல்லை நீங்கும்.