
தவறு செய்யும் பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
பொதுமக்கள் எந்த நேரத்திலும் 071-8591340 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பொலிஸார் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்
தவறு செய்யும் பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
வவுனியா மாவட்டத்தில் பொதுமக்களிடம் தவறாக நடந்துகொள்ளும் பொலிஸார் தொடர்பில் தமக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என்று வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி. பி. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொது மக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர் என்றும் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவு செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக தனக்கு அறியப்படுத்துமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் 071-8591340 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பொலிஸார் தொடர்பில் தமக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என்று வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி. பி. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்