ஜப்பானில் கானுன் புயல்-260 விமானங்கள் ரத்து
ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
ஜப்பானில் தென் பகுதியில் கானுன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலின் வேகம் வினாடிக்கு 40 மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஜேஏஎல் விமான சேவைகள் நேற்றைய தினம் 67 விமான சேவைகளையும், “ANA” விமான சேவை நேற்றைய தினம் 73 விமான சேவைகளையும், இன்று 124 விமான சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கானுன் புயலினால் கடுமையான மழை பெய்யும் அபாயம் உள்ளதால், தாழ்வான பிரதேசங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது