ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு மயிலிட்டி மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மயிலிட்டி மக்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் விழாவை முன்னிட்டு யாழல் தேசிய பொங்கல் விழா யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலிட்டி பகுதி இராணுவத்தினர் அடாத்தாக பிடித்து வைத்துள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி மயிலிட்டி அந்தோனியார் கோவில் முன்றல் நாளை காலை தொடக்கம் தொடர் போராட்டத்தை மயிலிட்டி மக்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பான கலந்துரையாடலின் போது காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் ரணில் விக்கிரமசிங்க அதற்கு சரியான தீர்வினை முன்னெடுக்கவில்லை என பேச்சுவார்தையில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது இராணுவத்தினருடன் கலந்துரையாடுவதாக ரணில் தெரிவித்தததாகவும் குறிப்பிட்டிருந்தது
இந்நிலையில் யாழிற்கு வருகைதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு காணி விடுவிப்பு அவசியம் என்பதை எடுத்து காட்டும் முகமாக மயிலிட்டி மக்கள் தொடர் போரட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.