சுற்றுலாப் பயணிகளின் வருகை 100,000 ஐ எட்டியது
ஜூலை 1-23 காலப்பகுதியில், இலங்கை 104, 664 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 100,000 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 1-23 காலப்பகுதியில், இலங்கை 104, 664 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் முழு மாதத்தில் 100, 388 பார்வையாளர்கள் வரவேற்கப்பட்டனர்.
ஜூலை முதல் மூன்று வாரங்களில், முதல் வாரத்தில் 28, 711 இரண்டாவது வாரத்தில் 31, 903 மற்றும் மூன்றாவது வாரத்தில் 34, 594 என சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக அதிகரித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில், மொத்த வருகையில் 17 வீதத்தைக் கொண்டு, இலங்கைக்கான மிகப்பெரிய சுற்றுலாப் போக்குவரத்து உருவாக்குனராக இந்தியா உருவெடுத்துள்ளது.
அதேவேளை, ஐக்கிய இராச்சியம் இரண்டாவது பெரிய சுற்றுலா பயணிகளின் வருகையை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல்லைகளைத் திறந்த சீனா, இலங்கைக்கான மூன்றாவது பெரிய மூலச் சந்தையாக சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் ஏழு சதவீதத்தைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ஜேர்மனி ஆகியவை தலா ஐந்து சதவீதத்தைக் கொண்டுள்ளன