fbpx

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விவகாரம்: கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உண்மை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இலங்கை அரசே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை(07.07.2023) காலை 10.00மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் வருமாறு முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றையதினம் நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய கொக்குத்தொடுவாய் பகுதியில் நிலத்தடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டப்பட்ட போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

பாரிய புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளும் எலும்பு உள்ளிட்ட மனித எச்சங்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to top button