
கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து பங்களாதேஷின் பிரதமர் சேக் ஹசீனா (Sheikh Hasina) திங்களன்று பதவி விலகியமையும், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமையும் ஒரே தன்மை கொண்ட சம்பவங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள், இறுதியில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களாக மாறிய நிலையிலேயே ஹசீனாவின் பதவி விலகலும் நாட்டில் இருந்து வெளியேறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.எனினும் கோட்டாபய ராஜபக்ச, வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக சென்ற பின்னரே தமது பதவி விலகலை அறிவித்திருந்தார்.இந்தநிலையில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள நிலைமை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த எச்சரிக்கையின் நிமித்தம், பங்களாதேஷ் உடனான தொடருந்து சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது.
முன்னதாக ஜூலை நடுப்பகுதியில் இருந்து அரச வேலைகளுக்கான ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களின் போது பங்களாதேஷில் குறைந்தபட்சம் 91 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.