
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணம் செலுத்தல்
உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது.
தமிழ் தேசிய கூ்டமைப்பிலிருந்து வெளியேறி, தனித்து போட்டியடுவதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்த பின்னர், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பணம் செலுத்தி வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி நேற்றைய தினம் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் ஆகியோர் நேற்று மதியம் கட்டுப் பணத்தை செலுத்தினர்.