கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது
இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.
கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் வழங்கல் மற்றும் இறப்பு பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.