காலாவதியான திரிபோசா வழங்கல்..! பெற்றோர் குற்றச்சாட்டு
கஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கஹ்பொல ரெகிதெலவ்வத்த தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையத்திலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோசா கையிருப்பு இன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரிபோசா பெற்ற தாய்மார்கள் தெரிவித்தனர்.
காலாவதியான திரிபோஷாக்களை விநியோகித்ததாக கூறப்படும் குடும்ப சுகாதார சேவை அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில், குறித்த திரிபோஷாக்களை வரும் வியாழன் அன்றுமாற்றம் செய்ய கொண்டு வருமாறு கூறினார்.
3 முதல் 5 வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கவும், தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு திரிபோஷா பொதிகள் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இது ஒரு தவறு. அதற்காக வருந்துகிறோம். விநியோகித்தவுடன் காலாவதியாகி விட்டது என்பது பெரிய விஷயம்.
திரிபோஷா விநியோகம் செய்யப்பட்ட வீடுகளுக்கு தெரியப்படுத்தி மாற்றி புதிய திரிபோஷா வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது எழுத்துப்பிழையா அல்லது பழைய திரிபோஷாவா என்பதைச் சரிபார்க்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.