
காதலி முன்னாடி தன்னை அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!
மராட்டியத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் வசித்து வந்தவர் பிரதீக் சந்தோஷ் கூட்வால் என்பவர். இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.
அதே பெண்ணை பிரதாமேஷ் மகது பதாரே என்ற மற்றொரு நபரும் காதலித்து உள்ளார். இந்நிலையில் காதலியின் கண் முன்னே சந்தோஷை மகது அடித்து தாக்கியுள்ளார். இதனால் சந்தோஷ் அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதனால் கடந்த மே மாதம் 25ஆம் தேதி சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதன் பின்னர் சில நாட்களுக்கு முன்பு பிரதீக் சந்தோஷின் தந்தைக்கு உண்மை விவரம் பற்றி தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் போசாரி காவல் நிலையத்திற்கு சென்று இதுபற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக மகது மீது வழக்குபதிவு செய்யப்பட்டுவுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.