காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர் கைது
இலங்கையில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிளிடம் விசாரணை நடத்திய பொலிஸ் தலைமையகம் அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.