காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா பகுதியில் உள்ள ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் வருந்தத்தக்க தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், தமது இராணுவத்தின் இலக்கை அடையும் வரை காசா யுத்தம் ஓயாது என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வடக்கு இஸ்ரேலின் பல நகரங்களில் அபாய எச்சரிக்கை ஒலி பரவியதால், எதிரிப் படைகளின் ரொக்கெட் தாக்குதல் அபாயம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு இஸ்ரேலின் நகரங்கள் லெபனான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால், ஹிஸ்புல்லா அமைப்பில் இருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.