கழிவுகளுடன் பலூன்களை அனுப்பிய வடகொரியா: மறக்க முடியாத பதிலடி கொடுத்த தென் கொரியா
வடகொரியாவில் இருந்து கழிவுகளுடன் பலூன்கள் அனுப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக தென் கொரிய சமூக ஆர்வலர்கள் 10 பலூன்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பலூன்களில், வடகொரியா போன்று கழிவுகளை நிரப்பாமல், கிம் ஜோங் உன் எதிர்ப்பு பரப்புரைகளும் K-pop என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்கள் தொகுப்பும் அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் 700 பலூன்களில் கழிவுகளை அனுப்பி வைத்ததன் காரணத்தை வெளிப்படுத்தியுள்ள வடகொரியா, தென் கொரிய சமூக ஆர்வலர்கள் இதற்கு முன்னர் செய்த தவறான செயல்களுக்கான பதிலடி என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பலூன்களை அனுப்புவதை முடித்துக் கொள்வதாக ஞாயிறன்று அறிவித்துள்ள வடகொரியா, தென் கொரியாவில் இருந்து பலூன்கள் பறக்க விடப்பட்டால் கட்டாயம் பதிலடி உறுதி என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சுதந்திர வட கொரியாவுக்கான போராளிகள் குழு 10 பலூன்களை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதில் 200,000 துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கொரிய பாப் இசை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட 5,000 USB டிரைவ்கள், அத்துடன் ஆயிரக்கணக்கான ஒரு டொலர் பணத்தாள்கள் ஆகியவற்றை நிரப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும், மக்களின் எதிரி கிம் ஜோங் தென் கொரியாவுக்கு கழிவுகளை அனுப்பி வைத்தார், நாங்கள் வட கொரிய மக்களுக்கு அன்பையும் உண்மையையும் பரிசாக அனுப்பி வைக்கிறோம் என சுதந்திர வட கொரியாவுக்கான போராளிகள் குழு தெரிவித்துள்ளது.