
களத்தில் இறக்கப்படவுள்ள 20 ஆயிரம் பொலிஸார்!
எதிர்வரும் காலங்களில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதன்போது வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடுதழுவிய ரீதியில் இன்று புதன்கிழமை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரையில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில் , எதிர்வரும் இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் , இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லை பகுதிகளை இலக்குவைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும் என்றும், இதன்போது , அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் பொது போக்குவரத்து சேவைகள் இயங்காது, வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டாது. இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளி பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, பொசன் போயா விடுமுறை தினமான நாளையதினம் மதவழிபாடுகளில் ஈடுபட மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.