கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !
திருமணமான தம்பதியர்கள் ஓரிரு மாதங்களிலேயே தான் கருவுற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் அவர்கள் அவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியம் உடலமைப்பை பொறுத்தது. இருப்பினும் சில வழிமுறைகளின் மூலம் துரிதமாக கருவுறலாம்.
உடலுறவு பின் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படுக்கையிலேயே படுத்துக் கொள்வது, கர்ப்பப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாகிறது. மேலும் உடலுறவு முடிந்த உடனே குளிக்க செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
அதிகாலையில் உங்கள் துணையிடம் சேர்வதால் கருத்தரித்தலுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
நீங்கள் கர்ப்பம் ஆவதற்கு தயாராக இருந்தால் மருத்துவர்களிடம் பரிசோதித்து, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை கேட்டு பெறுங்கள். இதன் மூலம் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மன அழுத்தமானது கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது. மன அழுத்தத்தை இசை தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வதனாலும், இயற்கையான அண்ட விடுப்பின் செயல்முறைக்கு இடையூறாக இருக்கும்.
நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பொழுது புகைப்பிடித்தல் மற்றும் மதுவை விட்டு விடுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
கருத்தரித்தலுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் உணவுகளில் ஒமேகா 3 நிறைந்த உணவுகள் பெரும் பங்கு ஆற்றுகிறது. இது கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளில் மிகுதியாக உள்ளது.