fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

கனடாவில் தற்காலிக வீசாவிலுள்ள தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து

கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடவடிக்கை CRS நடைமுறையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கொருமுறை, CRS தரவரிசையை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு வெளியிடுகிறது.

அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதி அட்டையைப் பெறுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நிர்ணயித்த CRS புள்ளிகள் 540 மற்றும் அதற்கும் அதிகம்.

மூன்று ஆண்டுகள் நீடிக்கும் post-graduate work permit வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த புள்ளியை எட்ட தகுதிபெறவில்லை என புலம்பெயர்தல் ஆலோசகரான Manan Gupta தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொடர்பான அமைச்சராக மார்க் மில்லர் நியமிக்கப்பட்ட போது, 2023இல் காலாவதியாகும் அனுமதிகள் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்தார்.இதன்போது CRS புள்ளி வரம்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Manan Gupta தெரிவித்துள்ளார்.

Back to top button