கனடாவில் அதிகரித்துள்ள நோய் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) ரொறன்ரோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரையில் இந்த ஆண்டில் மாத்திரம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த பக்றீரியா தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.