எரிவாயு விலை அதிகரிப்பு: உணவு பொருட்களின் விலை கூடுமா?
உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட்ட போது உணவுப்பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், 60 வீதமான உணவகங்கள் விலையை குறைக்கவில்லை. எனவே எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு தற்போது நெருக்கடியில் உள்ளமையினால் நியாமான விலையில் உணவக உரிமையாளர்கள் உணவினை வழங்க வேண்டும் என்றும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.