fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

எரிபொருள் வரிசைக்கான காரணத்தை கூறிய அமைச்சர்

எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகத்தர்கள் கொள்வனவு கோரிக்கையை வழங்காததால், எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் விலை திருத்தத்தை மேற்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள அவர், தேசிய எரிபொருள் அட்டைக்கு அமைய பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான போதிய எரிபொருள் கையிருப்பு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் LIOC யிடம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தங்களுக்கு அவசியமான எரிபொருட்களை கொள்வனவு செய்யுமாறு விநியோகத்தர்களிடம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Back to top button