எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதற்கான அமைச்சரவை பத்திரம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு நாணயத்தின் சுமையை சுமத்தக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆயிரத்து 190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 200 ஐ வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர், மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுமாறு இலங்கை ஐஓசி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.