எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்த புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு
எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் டியூக் தடுப்பூசி இதை உறுதி செய்துள்ளது. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.
டியூக் வாக்சின் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி மூலம் உடலில் நுழைந்த எச்ஐவி வைரஸைக் கண்டறிந்து பலவீனப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசிக்குப் பிறகு உடலில் புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளால் இந்த மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.