
உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்றுக்கொடுத்த யாழ்.மாணவர்கள்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர்.
2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும் யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.