
உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அட்டவணை வெளியாகியுள்ளது
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 2023ம் ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த மாதம் 16 திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

