இளைஞர்களின் முன்மாதிரியான செயல் : மக்கள் பாராட்டு
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் பேரூந்து தரிப்பிடமாக ஒன்றரை வருடங்கள் சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தியமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டுப் பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக கல்முனை வாழ் இளைஞர்கள் பாவனைக்குதவாத நிழற்குடையை திருத்துவது யார்? எனக்குறிப்பிட்டு விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிழற்குடையில் அண்மையிலுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலை, அருகிலுள்ள பாடசாலை உள்ளிட்ட அரச தனியார் ஊழியர்கள் பாவித்து வந்திருந்த போதிலும் அந்நிழற்குடை பாவனைக்குகந்த நிலையில் இல்லாமல் உடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த நிழற்குடை நிலைமையினை சமூக ஊடகங்களில் கண்டு இளைஞர்களின் உதவியுடன் அந்நிழற்குடையை திருத்தியமைத்து செவ்வாய்க்கிழமை (18) மக்கள் பாவனைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.