
இலங்கை சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்தியாவின் புதிய ரக பெட்ரோல்
இலங்கையில் வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள் என அழைக்கப்படும் 100 ஒக்டெய்ன் பிரீமியம் புதிய ரக பெட்ரோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது
இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் (ஐஓசி) நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அதனை அறிவித்துள்ளார். சாதாரண எரிபொருட்களை விட, குறித்த ரகப் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை மிக அதிகமாக இருக்கும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஐஓசிஆல் இலங்கைக்கு வெளியிடப்படும் அதிகூடிய ஒக்டேன் தரமதிப்புடன் விநியோகிக்கப்படவுள்ள முதலாவது எரிபொருள் இதுவாகும். இந்தநிலையில் மே 18 அன்று மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த -ஒக்டேன் எரிபொருள் இருப்பு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எக்ஸ்பி 100 என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை பெட்ரோல் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்.இந்தியன் ஒயிலின் XP100 சிறந்த antiknock பண்புகளுடன் கூடிய வேகமான முடுக்கத்துடன் இயந்திர ஆற்றலை மேம்படுத்துகிறது,
எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது மற்றும் அதிகரித்த இயந்திர ஆயுளுடன் சிறந்த இயக்கத்திறனை வழங்குகிறது. குறைக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகளுடன் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான சூழலுக்கு பங்களிக்கவும் இது உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.