
இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் நிலநடுக்கம்
இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.