இறக்குமதி முட்டைகள் இன்று முதல் சதொச ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை
கடந்த 25ம் திகதி நள்ளிரவு முதல் முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகளின் ஊடாக கொள்வனவு செய்யும் வாய்ப்பு இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஷாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகளின் ஊடாக 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என்றும் ஷாந்த நிரியெல்ல கூறியுள்ளார்.
மேலும், உள்நாட்டு முட்டைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 25ம் திகதி நள்ளிரவு முதல் முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.