இந்த இரண்டு பானங்களை குடித்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாமா?
பல வீட்டு வைத்தியம் மற்றும் மூலிகை பானங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். அப்படிபட்ட பானங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் என்பது மனிதனை கொல்லக்கூடிய ஒரு மோசமான நோயாகும். இதனால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படலாம். இது இயல்பை விட அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
இயல்பை விட குறைவாக இருப்பது ஹைபோடென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இதை கட்டப்படுத்த வேண்டும் என்றால் சரியான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது மிகவும் அவசியம்.
இதை கட்டுப்படுத்த சில மூலிகை பானங்களும் உண்டு. இது ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்டதாகும். துளசித் தேனீர் இதை துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
துளசி இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கும் போது அதில் 1 ஏலக்காயையும் சேர்க்கவும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் பச்சை ஏலக்காயிலும் காணப்படுகின்றன.
துளசியில் ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை நிர்வகிப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
செம்பருத்தி மலர் தேநீர் இதற்கு 1 செம்பருத்தி பூவை 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதனுடன் அர்ஜுன் பட்டை தூள் மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். பாதி ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும். இதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.
மேலும் இதில் அதிக அளவு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இந்த தேநீர் மன அழுத்தம், தலைவலி மற்றும் பல வகையான தோல் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது. இரத்த அழுத்தத்தை உடலில் தக்க வைத்து கொள்ளாமல் இதை கட்டாயம் செய்வது சிறந்தது.