அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மோதல் போக்கு
அரச உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்களும் பொதுமக்கள் மீது அரச உத்தியோகத்தர்களும் மாறி மாறி வன்மம் புணர்ந்தவண்ணமுள்ளனர்.இது ஆரோக்கியமானதல்ல.இந்த பிரச்சனை வேண்டுமென்றே அரச இயந்திரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமுக முரண்பாடே தற்போதைக்கு அரசாங்கத்தை தக்கவைக்கும் ஓரே ஆயுதம்.
எல்லா தரப்பினரும் இன்று ஏதோ ஒரு அத்தியாவசிய தேவைக்காக வீதியில் காக்கவைக்கப்பட்டுள்ளனர்.அரசாங்கத்தின் இயலாமை இங்கேயே மறைத்துவைக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் என்றால் வெளிக்கள உத்தியோகத்தர்களையோ, சொகுசு வாகனங்களில் ரை கட்டியபடி வலம்வருபவர்களையோ மட்டும் குறிப்பதல்ல .
சாக்கடை சுத்தம் செய்பவர் முதல் காலை அலுவலகத்திற்குள் நுழைந்தால் மாலை வரை கடமைபுரியும் சாதாரண அலுவலக பணியாள் வரை அந்த வகுதியினரே.
ஒருவர் தனது மேசையில் படுத்து தூங்குகிறார், இன்னெருவர் வேலை என்றுவிட்டு வீட்டில் படுத்திருககிறார் என்றால் அவர்களை நிர்வகிக்கும் நிர்வாகிக்கு திறமையில்லை அல்லது அவர் இவர்களைவிட சோம்பேறி என்பதுதான் உண்மை.
ஏதோ ஒருவழியில் அரச துறையில் பணத்தையோ பண்டத்தையோ கையாளத்தக்க அதிகாரம் பெற்ற ஒருவர் சுரண்டத்தக்கவகையிலும், சுரண்டியவர் எவ்வகையிலாவது தப்பிக்கும்வகையிலுமே அரச நிதி நிர்வாக நடைமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.
இது ஒட்டுமொத்த அரச உத்தியோகத்தர்களையும் பாதிக்கின்றது. தேனீ கூட்டில் வேலையாட் தேனீக்கள் போல அரச துறையிலும் தாம் பெறும் சம்பளத்திற்கு வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு தொடர் துன்பமும் கஷ்டமும் வரும்போதுதான் அதற்கான காரணங்களை அவர் தேடமுயல்கிறார். இன்பமாய் இருக்கும்போது தவறுகள் செய்கிறார் . இதனால் அவருக்கு துன்பம் வருகிறது. இந்த நிலைதான் இலங்கைக்கும்.
நான் ஒரு ரூபா திருடினால் என் மேலதிகாரி பத்துரூபா திருடுகிறார். இது பிரமிட் போல வளர்கிறது….
யாரை யார் தண்டிப்பது? திருத்துவது?
திருடுவதற்கு என்ன காரணம் என்றால்…. தனியார் துறையில் ஒருவருக்கு அடைவுமட்டம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த மட்டத்தை அடைந்து அதையும் தாண்டி அந்த நபர் செயற்பட்டால் அவரது சம்பளம் பன்மடங்காக்கப்படுகிறது. எனவே அவர் தனது அடைவுமட்டத்தை அதிகரிக்கவே எண்ணுவார். அதற்காகவே பணியாற்றுவார். அவருக்கு நிறுவனத்தை சுரண்டும் எண்ணம் ஒருபோதும் வராது.
ஆனால் அரசதுறையில் இந்த நிலை தலைகீழ்.
இங்கு தவறு எப்படி நடக்கிறது?
அதற்கு யார் காரணம்?
எப்படி சீர் செய்வது?
இந்த கேள்விகளுக்கு விடை இல்லை.
இதனால்தான் இந்த வன்மம்.
ஒருவன் அரச உத்தியோகத்தராக அவன் பட்ட கஸ்டங்கள் சொல்லொணாதவை. அதற்காக பதவிக்கு வந்தபின் சுரண்டைவது மன்னிக்கமுடியாதது.
அவனும் பொதுமக்கள் கூட்டத்திலிருந்துதான் இந்த வகுதிக்குள் வந்தான் என கொள்க.
உரிய பொறிமுறை வகுக்கத்தெரியாத அரச இயந்திரம் மீதான மக்கள் கோபம் சாதாரண ஊழியனை தாக்குகிறது.