fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அரசு பணி வேணும்னா மந்திரிவுடன் அந்த அறையில் படுத்தால்தான் பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ?

கர்நாடக மாநிலம்  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது,பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதில் காங்கிரஸ் கட்சி பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பணி நியமன ஊழல்களை விசாரிக்க மற்றும் அதில் உருவான குளறும்படிகளை நீதிமன்ற விசாரணை மூலம் அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு விரைந்து  நீதிமன்றம் குழு ஒன்றை  அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இளம்பெண்கள் அல்லது மாணவிகள் அரசு பதவிகள் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் சில அதிகாரிகளுடன் படுக்கையில் உடன் படுக்க வேண்டும். ஆண்களுக்கு அரசு பதவிகள் வேண்டுமானால்  அந்த பணிக்கான லஞ்சம் கட்டாயம் கொடுக்க வேண்டும். 

கர்நாடகத்தில் மந்திரி ஒருவர் அரசு வேலைக்கு இளம்பெண் ஒருவரை தன்னுடன் படுக்கும்படி கூறியுள்ளார். ஊழல் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததும் அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.நான் கூறியதிற்கு இதுவே எடுத்துக்காட்டு  என கூறியுள்ளார். 

இதேபோன்று கர்நாடகாவின் மின்பரிமாற்ற கழகத்தில் நடந்த 1,429 பதவிகளுக்கான நியமனத்தில் மொத்தம் 600 பதவிகளுக்கு ஒப்புதல் பேசப்பட்டுள்ளன. உதவி பொறியாளர் பணிக்கு ரூ.50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் பணம் பெற்றுள்ளனர். 

இதில் மொத்தம் ரூ.300 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று கார்கே கூறியுள்ளார். இதுபோன்று ஒவ்வொரு பதவிக்கான தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றால் ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகள் என்ன செய்வார்கள்? ஊழல் வெளிச்சத்திற்கு வந்தும் தங்களை எதுவும் செய்ய முடியாது என சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு நன்றாக தெரியும்.

இதனால் கர்நாடக மின்பரிமாற்ற கழக பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த 3 லட்சம் மாணவர்களின் வருங்காலத்துடன் அரசு விளையாடி கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.இது போன்ற சில மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதால்தான் அந்த பெருமை வாய்ந்த இடத்திற்கே கேட்ட பேரு வந்து சேர்க்கிறது என்று பகிரங்கமாக கூறினார்.

Back to top button