அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி
அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரைஸ் டிரக்கிங் பண்ணைக்கு அருகிலுள்ள கான்கார்ட் ஃபார்ம்ஸ் அருகே சான் மேடியோ அவென்யூவில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த இடத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்தாவது நபர் பலத்த காயங்களுடன் ஸ்டான்போர்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது துப்பாக்கிச் சூடு Cabrillo Highway South பகுதியில் இடம்பெற்றது அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன