வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொடருந்து சாரதிகள்
தொடருந்து சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளுக்கான பதவி உயர்வுகள், சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடருந்து சாரதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே தொடருந்து பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிட்டதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.