fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு இல்லை: கடும் நெருக்கடியில் கிராம உத்தியோகத்தர்கள்

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த முகாம்களுக்குச் செல்லாமல் சில வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்படட அரசாங்கத்தின் சுற்றறிக்கையால் கிராம உத்தியோகத்தர்கள் கிராமத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே சமைத்த உணவு அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடம்பெயர்ந்த வீடுகளில் தங்கியுள்ள மக்களும் அரசாங்கத்தினால் சமைத்த இந்த உணவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முகாம்களுக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை திருத்தப்பட வேண்டும் என கிராம அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த அனர்த்த முகாமைத்துவ சுற்றறிக்கை நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இல்லாத இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுக்கான அரச ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் முன்வருவதில்லை என கிராம அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலைமையினால் இடம்பெயர்ந்த முகாம்களில் இல்லாத இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கு கிராம மக்கள் மற்றும் வசதிபடைத்தவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் 90 வீதமானவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், கிராமத்தில் கோவில்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் எவரும் இல்லை எனவும் கிராம அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் 450 ரூபாய்க்கு மூன்று வேளை உணவும், 2 தேனீரும் கொடுக்கப் போதாது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடைகள், பெண்களுக்கான சுகாதார உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு உடைகள் வழங்குவதற்கு அவர்கள் வசதிபடைத்தவர்களை தேட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களை இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சாப்பிட வருமாறு கேட்டால் கிராம அதிகாரிகளை தாக்குவார்கள் என கிராம அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு முதல் உள்ள இந்த சுற்றறிக்கையை திருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என, கிராம அலுவலர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Back to top button