
வெளிநாடு செல்லவிருக்கும் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இணையத்தளத்தில் எதிர்காலத்தில் உரிய தொழில் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்