
யாழ்ப்பாணத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – களபூமி, பாலாவோடை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் நேற்று (09) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நபரை காப்பாற்ற முயற்சி செய்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.