யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன? விளக்கமளிக்கும் மருத்துவர்
தனது மருந்தகத்தில் மரணச்சடங்கு இடம்பெற்றதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளதென யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் நேற்றையதினம் (25.07.2024) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வைத்தியர் மேலும் விளக்கம் அளிக்கையில்,
“அண்மையில் எனது உறவினர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு நாட்கள் அவரது பூதவுடலானது மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மரணச் சடங்கு நடைபெற்றது எனது மாமியாரின் வீட்டில். அந்த வீடானது மருந்தகத்திற்கு பின்னால் வேறாக அமைந்துள்ளது. அடுத்ததாக, மருந்துகள் இடம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. மருந்தகம் பூட்டப்பட்டிருந்ததால் மருந்துகள் எவையும் விநியோகிக்கப்படவில்லை.
இதனை எமது மருந்தகத்திற்கு வந்த உணவுப் பரிசோதர்களும் உறுதிப்படுத்தி இருந்தார்கள். மரணச் சடங்கு நடைபெற்ற வேளையிலே மருந்து விற்பனை இடம்பெற்று இருந்ததாக காட்டுவதற்காக திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது ” என குறிப்பிட்டுள்ளார்.
தமது மருந்தகம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,