
மோசமான காணொளியால் முகம் சுளிக்க வைத்த இளம் தம்பதியினர்
திருமணமான இளம் தம்பதியர் தமது அந்தரங்க விடயங்களை நேரலையாக இணையத்தளத்தில் பகிர்ந்தமைக்காகவே கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 23 வயதுடைய பெண்ணும் 25 வயதுடைய ஆணும் என கூறப்படுகின்றது.
குறித்த தம்பதியர் 16 வயது முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களை நோக்காகக் கொண்டு தங்கள் அந்தரங்க விடயங்களை நேரலையில் காணொளிகளாக பகிர்ந்துள்ளனர்.
குறித்த இருவரையும் கைதுசெய்துள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்கள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.