மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
பன்னலயைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதான விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தங்கொடுவ, வென்னபுர மற்றும் மாகந்துர பிரதேசங்களில் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சந்தேக நபரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நீண்ட காலமாக மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தங்கொடுவ பிரதேசத்தில் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கல்வி கற்கும் மேலும் பல மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தாரா என விசாரணை நடத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.