மட்டன் சாப்பிட்ட பின்பு இந்த உணவை சாப்பிடாதீங்க! விஷத்திற்கு சமமாம்
மட்டன் சாப்பிட்ட பின்பு சில உணவுகளை எடுத்துக்கொள்வது, விஷத்தை சாப்பிட்டதற்கு சமம் என்று கூறப்படுகின்றது.
பொதுவாக இன்று பெரும்பாலான நபர்க்ள் அசைவ உணவையே விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அதற்கென்று தனி கூட்டமே இருக்கின்றது.
இப்போதெல்லாம் அசைவம் சாப்பிடுவதால் பலவிதமான நோய்கள் வருகின்றன. அதனால் மட்டன் சிக்கன் சாபிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது, குறிப்பாக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், யூரிக் அமிலம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இறைச்சி உண்பதைக் குறைத்துள்ளனர்.
ஆனால் இந்த மட்டனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாகவும் மாறும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மட்டன் சாப்பிட்ட பின்பு பால் குடிப்பது கூடாது. இவை வயிறு வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். பால் மற்றும் இறைச்சி இரண்டும் புரதத்தின் ஆதாரமாக இருப்பதால் செரிமானத்தில் தாமதம் ஏற்படும்.
அடுத்ததாக மட்டன் சாப்பிட்ட பின்பு தேன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் உடம்பில் சூடு பிடிக்கும். மேலும் தேன் உங்களது இதயம் மற்றும் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதே போன்று ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின்பு டீ குடிப்பதை பலரும் விரும்புவார்கள். அவ்வாறு செய்வதால் அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது.
முக்கியமாக அசைவம் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வது கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.