பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
பெற்றோலிய கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka), இரு அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே பெற்றோலிய நிறுவனத்தின் கடன் சுமை படிப்படியாக அதிகரித்து எரிபொருள் பிரச்சினை தோன்றியதன் மூலம் கடன் வேகமாக வளர்ந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, அரச வங்கிகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அரச வங்கிகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.