நீரிழிவு நோய் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்குமா?
நீரிழிவு என்பது இரத்த குளுக்கோஸ் – இயல்பை விட அதிகமாக இருக்கும் – ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இது இருதய பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கலாம். ஆனால், சர்க்கரை நோய் ஆண், பெண்களின் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் பாலியல் பிரச்சினைகளுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். புது தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி.டி.ஓ.சி மருத்துவமனையின் நீரிழிவு மருத்துவர் ரித்தேஷ் குப்தா இதைப் பற்றி விளக்கினார், “நீரிழிவு நோய் நரம்புகள், சுழற்சி மற்றும் ஹார்மோன்களில் அதன் தாக்கம் காரணமாக பாலியல் வாழ்க்கையை மோசமாக பாதிக்கலாம். மேலும், ஒரு நாள்பட்ட நோயைக் கையாள்வதில் ஏற்படும் மன அழுத்தமும் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம். ஆண்கள் மீதான தாக்கம் நீரிழிவு’ ஆண்களுக்கு விறைப்புத்தன்மை செயலிழப்பு மற்றும் பாலியல் ஆசையைக் குறைக்கும் என்று நிபுணர் பகிர்ந்து கொண்டார். “உயர் இரத்த சர்க்கரை’ நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம் மற்றும் விறைப்புத்தன்மையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.” கூடுதலாக, டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் – கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயில் குறைவாக இருக்கலாம், இது குறைந்த பாலியல் ஆசை மற்றும் விறைப்பு குறைபாடுக்கு வழிவகுக்கும். பெண்கள் மீதான தாக்கம் பெண்களிலும், நீரிழிவு நோய் பாலியல் ஆசையை குறைக்க வழிவகுக்கும்.
நீரிழிவு உள்ள பெண்களுக்கு பாலியல் ஆசை குறையும். கட்டுப்பாடற்ற சர்க்கரைகள்- பிறப்புறுப்பு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம், இது பாலியல் செயல்பாடுகளைத் தடுக்கலாம். தடுப்பு மற்றும் சிகிச்சை இந்த சிக்கல்களை தடுக்க, ஒருவர் சர்க்கரை அளவை போதுமான அளவு கட்டுப்படுத்தவும், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்ய நிபுணர் பரிந்துரைத்தார்
. “நீரிழிவு மற்றும் பாலியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சரியான கவனிப்பு தேவை. இந்த பிரச்சினைகளுக்கு பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. குறைந்த ஹார்மோன் அளவைக் கொண்ட ஆண்களுக்கு சில சமயங்களில் டெஸ்டோஸ்டிரோன் மாற்று தேவைப்படுகிறது, இருப்பினும், நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகுதான் இவற்றை எடுக்க வேண்டும்” என மருத்துவர் கூறினார்