நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அத்திப்பழம்
இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பழம் தான் அத்திப்பழம்.
பார்ப்பதற்கு கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவே இருக்கின்றன.
இதன்படி, அத்திப்பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், தியாமின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே ஆகிய ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
அந்த வகையில், அத்திப்பழம் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம் என்ற கருத்தும் சமூகத்தில் பரவலாக உள்ளது. இந்த கூற்றில் மறைந்திருக்கும் விஞ்ஞான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மெடிக்கல் நியூஸ் டுடேயின் படி, அத்திப்பழத்தை உட்க் கொள்ளும் பொழுது ஆன்டிகார்சினோஜெனிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, கொழுப்பை குறைத்தல் மற்றும் செல்-பாதுகாப்பு உள்ளிட்டவைகளை செய்கிறது.
2. கல்லீரலைப் பாதுகாக்கும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அதுமட்டுமன்றி நீரழிவு நோயாளர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம்.
3. செரிமானத்தில் கோளாறு இருப்பவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் எந்தவிதமான தயக்கமுமின்றி அத்திப்பழத்தை சாப்பிடலாம். இதிலிருக்கும் நார்ச்சத்து, ப்ரீபயாடிக்குகள் இந்த பிரச்சினையை சரிச் செய்கிறது.
4. ஊற வைத்த அத்தி பழங்களில் வைட்டமின் E மற்றும் சிங்க் அதிகமாக இருக்கும் இது சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கி சருமத்தை பளபளப்பாகிறது. எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது.
5. அத்திப்பழத்தில் பெற்றாசியம் சத்து இருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் வேலைச் செய்கிறது. இதனால் இதய நோயுள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் தரும்.
6. ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலத்தின் இயற்கையாக அத்திப்பழத்தில் இருக்கிறது. இது செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இரவு வேளைகளிலில் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.