சுவிட்சர்லாந்தில் பனிபொழிவு அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பனிபொழிவுடன் கூடிய குளிர்ச்சியான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்நிலங்களிலும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பனிக்கோடு 600 முதல் 800 மீட்டர் வரை குறைகின்றமையால் முழுநாடும் குளிர்ச்சியால் தாக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வாரம் முழுவதும் பனிப்பொழிவு இருக்கும். நிலமட்டத்திலிருந்து 500 மீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குறிப்பாக ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளில் ஒரு சில சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவை எதிர்பார்க்கலாம். மலைப்பகுதிகளில் புதன்கிழமை வரை அரை மீட்டர் புதிய பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 1800 மீட்டருக்கு மேல் மற்றும் குறிப்பாக வலாய்ஸ் , பெர்னீஸ் ஓபர்லேண்ட் பகுதிகளில் புயல் காற்றுடன் இணைந்து, பனிச்சரிவுகளின் ஆபத்து கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.