குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள்- கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் உணவு பழக்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றது.
பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு விடயத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இதை தவறும் பட்சத்தில் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது இருக்கும் பிஸியான வாழ்க்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை.
மாறாக உணவு பழக்கங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தாண்டி அவர்களின் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்துக்கின்றது.அந்த வகையில் குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. தற்போது பர்கர், பீட்சா, பிரஞ்சு பிரைஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மக்கள் மத்தியில் கேள்வி அதிகமாக இருக்கின்றது. இதனால் நாளடைவில் உடல் பருமன், சர்க்கரை நோய், சோர்வு போன்ற நோய் நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
2. சந்தையில் கிடைக்கும் பானங்கள் பெரும்பாலும் இயற்கை இனிப்புகளாக இல்லாமல் செயற்கை இனிப்பு, நிறமூட்டிகள், இரசாயன சுவையூட்டிகள் கலக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரக் கூடும்.
3. குழந்தைகள் எது இல்லாவிட்டாலும் இருப்பார்கள். குக்கீகள், சாக்லேட்கள் மற்றும் இனிப்புகள் இல்லாமல் இருப்பது குறைவு. நகரங்களில் வளரும் குழந்தைகள் நாளொன்றுக்கு இதில் எதையாவது ஒன்று சரி வாங்கி உண்பார்கள். இந்த பழக்கத்தால் அவர்களுக்கு செரிமான கோளாறு ஏற்படும். குழந்தைகளுக்கு முடிந்தவரை வீட்டில் செய்யப்படும் உணவுகளை கொடுப்பது சிறந்தது.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்பார்கள். இது போன்ற பழக்கங்கள் குழந்தைகள் உடல்நிலையை தாண்டி அவர்களின் மன ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
5. சந்தையில் பல வகையான தின்பண்டங்கள்a விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சுவைக்காக சேர்க்கபடும் உப்புகளினால் காலப்போக்கில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பன்மடங்கு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாம். முடிந்தளவு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ்,சிப்ஸ்கள் கொடுப்பதை தவிர்க்கவும்.