கணவனின் விநோத முறையிலான தாம்பத்தியத்துக்கு மனைவி அனுமதிக்கலாமா?
எனக்கு வயது 27. நான் கிராமத்து சூழலில் வளர்ந்த பெண். கணவர் தூரத்து உறவு முறை. அவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே நகரத்தி ல்தான். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கூட 2 வருடங்கள் தான். என் மனதில் இருக்கும் சந்தேகத்தை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பி தவிக்கும் போதுதான் இந்த பாலியல் கட்டுரைகள் குறித்த நிபுணரின் தீர்வுகள் கண்ணில் பட்டது.
நான் வளர்ந்த சூழலில் தாம்பத்தியம் என்பது இலை மறை காயாக தான் எங்கள் ஊரில் உறவினர்கள் மத்தியில் பேசுவார்கள். அதுவும் திருமணம் ஆகாத பிள்ளைகள் முன் கணவன் மனைவி தொட்டு கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். இளந்தம்பதியர் கூட அப்படிதான். எல்லாமே அறைக்குள் தான் என்று சொல்வார்கள். இந்த சூழலில் திருமணத்துக்கு பின் கணவன் மனம் கோணாமல் நடந்துகொள் என்று அம்மா அறிவுறுத்தினார்கள்.
அவருக்கு பிடித்தமாதிரி தான் நடந்துகொள்கிறேன். ஆனால் இரவு நேரத்தில் உறவு கொள்வதை தாண்டி பகல் நேரத்திலும் உறவு கொள்ள வற்புறுத்துகிறார். எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றாலும் விடுவதில்லை. அதிலும் சில வீடியோக்களை காண்பித்து அதன் படி செய்யலாம் என்று என்னையும் வறுபுறுத்துகிறார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வருகிறது.
நான் மறுக்கும் போது என்னிடம் ஒரு வாரம் வரை பேசுவதில்லை. எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை. எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. அவரிடம் எப்படி புரியவைப்பது? இந்த ஆலோசனை கூட அவரது அறிவுறுத்தலில் தான் அனுப்பியுள்ளேன். நான் என்ன செய்வது?
டாக்டர். T.K. காமராஜ் அவர்களின் பதில்..
அருமையான கேள்வி என்று சொல்லலாம். உண்மையிலேயே இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்வதில் கூட கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் முதன் முதலில் கவுன்சிலிங் ஆரம்பித்த புதிதில் எங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வரத்தான் செய்தது. 1990- களில் நாங்கள் இண்டர்நெட் வழியாக கவுன்சிலிங் தொடங்கி இருந்த நேரம். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் இருந்தது. அப்போது எங்கள் கவுன்சிலிங் பிரபலமாக இருந்தது.
அப்போது ஃப்ரீ செக்ஸ் குறித்த கேள்விகள் எங்களிடம் கேட்பார்கள். அதை செய்ய வேண்டாம் என்று நாங்கள் பதில் கொடுத்தால் அமெரிக்காவிடமிருந்து ஒருவர் பதில் அனுப்புவார். டாக்டர் உங்களுக்குத்தான் ட்ரீட்மெண்ட் தேவை என்று. ஏனெனில் அங்கு திருமணத்துக்கு முன்பே செக்ஸ் என்பது இயல்பானது. ஆனால் சுய இன்பம் செய்வதே தவறு என்று சொல்லிகொண்டிருக்கிறோம்.
உணவு முறை கூட அப்படிதான் அங்கு ரொட்டியும் சாண்ட்விச் – என்றால் இங்கு அரிசி, இட்லி என்று சொல்லலாம். இதில் உன்னுடையது தவறு, எங்களுடையது சரி என்று பேச முடியாது. உங்களுடைய பிரச்சனையின் படி உங்கள் கணவர் வளர்ந்த இடம், பழக்கம் போன்றவையும் உங்கள் வளர்ப்பும் வேறு வேறாக இருந்திருக்கலாம். பெரிய அளவு வேறுபாடு இல்லை என்றாலும் சிறு சிறு விஷயங்களில் இது தான் சரி என்று உங்களை வளர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு மாதவிலக்கு என்றால் தீட்டு என்று சொல்லி வளர்த்திருக்கலாம்.
மாதவிலக்கு தீட்டு என்னும் போது கணவனுடன் உறவு கொள்வதையும் தீட்டு என்று சொல்லி வளர்த்திருக்கலாம். உறவு என்பது கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமே உள்ள அந்தரங்கமான விஷயம். உங்களுக்கு பிடித்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம். 550 முறைகளில் உடலுறவு கொள்ள முடியும்.
கஜூராஹோ சிற்பங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். செக்ஸ் செய்யும் போது எப்படி எல்லாம் செய்யலாம் என்று நீங்கள் கற்பனை செய்திருக்கிறீர்களோ, எந்த முறையில் உறவு கொள்ள விரும்புகிறீர்களோ அவையெல்லாமே சிற்பங்களாக பார்க்கலாம். இன்னும் அதில் வாய்வழி முறை, பலருடன் உறவு கொள்ளும் சிற்பங்கள்களை கூட பார்க்கலாம். அறம்,பொருள், இன்பம் என்று காமத்துக்கும் தனி இடம் கொடுத்திருப்பது வாழ்வியலில் முக்கியமானதாக அந்த காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. காலப்போக்கில் செக்ஸ் குறித்து யாரும் பேசாமல் அதை வெளிப்படையாக பேசுவதே அசிங்கம் என்ற கட்டுக்கதைகளை பரவி இருக்கலாம்.
பொதுவாக தாம்பத்தியம் என்பது கணவன் மனைவிக்குள் மட்டுமே இருக்கும் ரகசியம். இதில் கவனிக்க வேண்டியது ஒருவனுக்கு ஒருத்தி என்னும் முறையில் இருக்க வேண்டும் என்பது தான். கணவன் மனைவிக்குள் செக்ஸ் வைத்து கொள்வதற்கு இரவு பகல் தேவையில்லை. உங்கள் மகிழ்ச்சி மட்டும் தான் முக்கியம். தினமும் ஒரே மாதிரியாக செக்ஸ் வைத்துகொள்ள வேண்டும் என்பதில்லை. தினம் ஒருமுறையாக 550 வகைகளில் செக்ஸ் வைத்துகொண்டாலே தினம் ஒன்று செய்யலாம்.
செக்ஸ் செய்வதிலும் வெரைட்டி வேண்டும். அப்படி எதிர்பார்க்கும் போது கிடைக்காத நிலையில் வேறு பார்ட்னரை நாட தொடங்கிவிடுகிறார்கள். இதுதான் பல இடங்களில் தவறுகள் நடக்கிறது. அதே போல் தினமும் படுக்கை அறையில் தான் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு முறை சமையலறையில், ஒரு முறை பாத்ரூமில், ஒரு முறை ஹால் என்று வீட்டில் யாரும் இல்லாத போது நீங்கள் செய்யலாம். தாம்பத்தியம் என்பது திகட்டாதது. அதனால் தாம்பத்தியம் குறித்த கட்டுக்கதைகளை விட்டு கணவருடன் மகிழ்ச்சியாக இருங்கள். வாழ்த்துக்கள்.