எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கின்றது
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க அழைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் தடவையாக விலையில் திருத்தம் செய்யப்பட்டது.
27ஆயிரம் மெட்ரிக்தொன் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் 12 ஆயிரம் மெட்ரிக்தொன் ஒக்டேன் 95 போன்ற போதுமான எரிபொருள் கையில் இருக்கின்ற போதிலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை குறைத்துள்ளது.
டீசலை பொறுத்தவரையில், தற்போதுள்ள அதன் இருப்பு ஐந்து நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.
இந்தநிலையில் இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்யப்படும்வரை, மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்படும் என்று பாலித குறிப்பிட்டுள்ளார்.