இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழமை போல் இயங்கும்
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்று போதியளவு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டுப்பாடுகள் இலங்கை போக்குவரத்து சபை சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள் வழமையாக இயங்குவதாகவும், இதுவரையில் எரிபொருள் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அட்டவணைப்படி தொடருந்து சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.