இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!
பொதுவாக மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கிய அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை.
மூட் ஸ்விங்ஸ்:
ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் போன்ற உணர்ச்சிகள் நம் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றே. 6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும்.ஆனால், சிலர் மட்டும் காரணமே இல்லாமல் தன் இயல்பை மீறி பல்வேறு மனநிலையில் செயல்படுவர். இதனால், எரிச்சல், கோபம், சோர்வு, கவனசிதறல் போன்றவை ஏற்படும்.
மனநலத்தில் பாதிப்பு :
மனநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். அதோடு, பசியின்மை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் சிலருக்கு கவலை, குற்றஉணர்ச்சி, பயம், கோபம், குழப்பம் இவையெல்லாம் ஏற்படலாம்.சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது. அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம். அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான்அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும்ஆர்வத்தை குறைக்கும்.